’தளபதி 65’ படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான ’தளபதி 65’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

thalapathi 65

இந்த நிலையில் இந்த படத்தில் கேஜிஎஃப் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அன்பரிவ் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

இதுகுறித்து அன்பரிவ் உதவியாளர்களில் ஒருவர் வீடியோ ஒன்றில் கூறிய போது ’அடுத்த வருடம் கேஜிஎப் படத்தின் ஸ்டண்ட் குறித்து யாரும் பேச மாட்டீர்கள். தளபதி 65 படம் குறித்து தான் பேசுவீர்கள். அந்த அளவுக்கு அந்த படத்தில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது 

தளபதி 65 திரைப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது


 

From around the web