ஆத்தோவ்.. அண்ணோவ்.. திட்டாதீங்கப்பா.. முடியல!... கதறும் நட்டி நட்ராஜ்

phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி.
 
ஆத்தோவ்.. அண்ணோவ்.. திட்டாதீங்கப்பா.. முடியல!... கதறும் நட்டி நட்ராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி, தியேட்டரில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

பல வகையிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கர்ணன் திரைப்படமும் தனுஷின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷூடன் இணைந்து நடிகர் லால், ரெஜிஷா விஜயன், கௌரி கிஷன், ப்ரியா சந்திரமௌலி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஒரு குரூரமான போலீஸாக நட்டி நட்ராஜ் நடித்திருப்பார். அந்த கேரக்டர் நடந்துகொள்வதை பார்த்து கோபவம் வராதவர்களே இருக்க முடியாது எனும் அளவுக்கு நட்டி நட்ராஜ் அந்த கேரக்டரை வேற லெவலில் நடித்திருப்பார். குறிப்பாக வயதானவர்களை அடித்து, ஊரையே பிடித்து தமது ஈகோவுக்கு இரையாக்க நினைக்கும் காட்சிகளில், தனுஷூடன் சண்டையிட்டு இறக்கும் தருவாயிலும் கூட திருந்தாமல், ஆதிக்க மனப்பான்மையுடன் நடித்திருப்பார் நட்டி.

நடிகர் நட்டி எனும் நடராஜ் அடிப்படையில் பாலிவுட் வரையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் என்பதும், தல அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் எச். வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை படத்தில் ஹீரொவாக நடித்திருந்தார். ஆனால் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் அத்தனை ஃபிராடு தனங்களையும் செய்து பாதியில் திருந்துவது போல் நடித்திருப்பார். எனினும் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார்.

இந்நிலையில் தான் கர்ணன் படத்தில் கண்ணபிரான் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டி விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் பார்வையாளர்களால் கண்ணபிரான் கேரக்டரின் குணம் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இதனால், நடிகர் நட்டி, தமது ட்விட்டர் பக்கத்தில் “என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி.” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


 

From around the web