சிவகார்த்திகேயனுக்கு போன நடராஜன் வாய்ப்பு: ஆத்திரத்தில் தனுஷ் செய்த காரியம்!

 

யார்க்கர் புயல் நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரை படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியதாகவும் கூறப்பட்டது

ஆனால் தற்போது திடீரென நடராஜன் வாழ்க்கை வரலாறு கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

நடராஜன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று தனுஷ் மிகவும் விரும்பியதாகவும் ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அந்த வாய்ப்பு போனது தனுஷை ரொம்பவே அப்செட் ஆக்கிய தாகவும் கூறப்படுகிறது

sivakarthikeyan

இதனை அடுத்து நானும் ஒரு முன்னணி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிய தனுஷ் தற்போது செஸ் விளையாட்டு வீரர் ஆனந்த் விசுவநாதன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தை ஒரு முன்னணி இயக்குனர் இயக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. நடராஜன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன் படமும் விசுவநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் தனுஷ் படமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

From around the web