ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்- டுவிட்டரில் பிரதமர் இரங்கல்

சென்ற தேசிய ஜனநாயக வாஜ்பாய் தலைமையிலான அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அங்கம் வகித்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவர் நீண்ட காலம் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி வாழ்ந்து வந்தார் அல்சைமர் என்னும் மறதி நோயாலும் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சம்
 

சென்ற தேசிய ஜனநாயக வாஜ்பாய் தலைமையிலான அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அங்கம் வகித்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவர் நீண்ட காலம் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி வாழ்ந்து வந்தார் அல்சைமர் என்னும் மறதி நோயாலும் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்- டுவிட்டரில் பிரதமர் இரங்கல்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


அதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

அச்சம் இல்லாத, வெளிப்படையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன், நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பையாற்றி வந்துள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.


ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். 


எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் அவரது மறைவு ஆழ்ந்த துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது . அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என அவர் அதில் கூறி உள்ளார்.

From around the web