7 வயது குழந்தைக்கு அம்மாவாகும் விஜய் நாயகி

விஜய் நடித்த ‘புலி’ படத்தின் மூன்று ஹீரோயின்களில் ஒருவர் நந்திதா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ‘நர்மதா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நந்திதா ஏழு வயது குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை மற்றும் தனது கேரக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இயக்குனர்
 

7 வயது குழந்தைக்கு அம்மாவாகும் விஜய் நாயகிவிஜய் நடித்த ‘புலி’ படத்தின் மூன்று ஹீரோயின்களில் ஒருவர் நந்திதா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ‘நர்மதா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நந்திதா ஏழு வயது குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதை மற்றும் தனது கேரக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இயக்குனர் கீதா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

7 வயது குழந்தைக்கு அம்மாவாகும் விஜய் நாயகிஇந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நந்திதாவின் மகனாக ரெனேஷ் என்ற சிறுவன் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

From around the web