சொந்தக்குரலில் டப்பிங் பேசிய நானா படேகர்: ஆச்சரியத்தில் காலா குழுவினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள ‘கபாலி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. . இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று தனது பகுதியின் டப்பிங் பணியை இன்று முடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழி பதிப்பிற்கும் அவரே சொந்தக்குரலில் டப்பிங் செய்தார். கடந்தசில
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள ‘கபாலி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. .

இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று தனது பகுதியின் டப்பிங் பணியை இன்று முடித்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழி பதிப்பிற்கும் அவரே சொந்தக்குரலில் டப்பிங் செய்தார். கடந்தசில வருடங்களுக்கு முன் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தில் அவர் நடித்தபோது அவர் தமிழில் டப்பிங் செய்ய மறுத்துவிட்ட நிலையில் ‘காலா’ படத்திற்கு மட்டும் அவரே டப்பிங் செது கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சி இயக்கியுள்ள ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பா நிறுவனம் தயாரித்துள்ளது.

From around the web