விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் நலன்குமாரசாமி!

விஜய் சேதுபதி நடித்த ’சூதுகவ்வும்’ மாற்றும் ’காதலும் கடந்து போகும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமி மீண்டும் விஜய் சேது உடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தில் 4 முன்னணி இயக்குனர்கள் பணிபுரிய உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். கௌதம் மேனன், வெற்றிமாறன், ஏ.எல்.விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்க உள்ளனர் 

ஓடிடி பிளாட்பாரத்திற்காக உருவாகும் இந்த திரைப்படத்தின் நலன் குமாரசாமி பகுதியில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. டாப்ஸி படத்தில் நடிப்பதற்காக ஜெய்ப்பூர் சென்றிருக்கும் விஜய் சேதுபதி அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நலன் குமாரசாமி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

From around the web