நந்திதா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் சமந்தா கணவர்

தற்போது ஒவ்வொரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், டிரைலர், டீசர் ஆகியவற்றை மற்றொரு திரைப்பட நட்சத்திரம் வெளியிட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகை நந்திதா ஸ்வேதா நடித்த திரைப்படங்களில் ஒன்றான ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமந்தாவின் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா வெளியிட உள்ளார் இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு நாகசைதன்யாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்த், நந்திதா ஸ்வேதா,
 

நந்திதா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் சமந்தா கணவர்

தற்போது ஒவ்வொரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், டிரைலர், டீசர் ஆகியவற்றை மற்றொரு திரைப்பட நட்சத்திரம் வெளியிட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகை நந்திதா ஸ்வேதா நடித்த திரைப்படங்களில் ஒன்றான ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமந்தாவின் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யா வெளியிட உள்ளார்

இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு நாகசைதன்யாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்த், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்ரகாஷ், கிஷோர் உள்பட பலர்நடித்துள்ள இந்த படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்

சைமன்கிங் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கொரோனா வைரஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு அனுமதித்துள்ளதை அடுத்து விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தப்படம் நந்திதாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web