தனது மகளுடன் கொஞ்சும் இளமை போட்டோவை பதிவிட்ட நதியா...

மகளுடன் கொஞ்சும் இளமையில் அக்கா தங்கச்சி போல் துள்ளும் இளமையில் நதியா
 
தனது மகளுடன் கொஞ்சும் இளமை போட்டோவை பதிவிட்ட நதியா...

தமிழ் சினிமாவின் 80-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா, இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானது மட்டுமின்றி, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் முதன் முதலாக நடித்த தமிழ் நடிகை அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர்.

இதனிடையே M.குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நதியா, தொடர்ந்து தாமிரபரணி, பட்டாளம், சண்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் நதியா, அவரின் இளைய மகள் ஜனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் அம்மா-மகள் போலவே தெரியவில்லை என்றும், அக்கா தங்கச்சி போல் இருக்கின்றார்கள் என கூறிவருகின்றனர்.

From around the web