மறுபடியும் சிங்கமாக எழுந்து வர வேண்டும்: தவசிக்கு ஆறுதல் கூறிய ரோபோ சங்கர்!

 

சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் குணசித்திர நடிகராக நடித்து அசத்தியர் நடிகர் தவசி. இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய சிகிச்சைக்கு திரையுலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் இன்று நடிகர் தவசி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற ரோபோ சங்கர் பண உதவி அளித்து அவருக்கு ஆறுதல் கூறினார். அந்த மீசையை நாங்கள் மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் சிங்கம் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்றும் தைரியமாக இருங்கள் என்றும், நீங்கள் நிச்சயம் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று ஆறுதல் கூறினார் 

robo

மேலும் ’ஐ எம் பேக்’ என்று சொல்லுங்கள் என்று ரோபோ சங்கர் சொல்ல அவர் கூறியவாறு தவசி கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
மேலும் நடிகர் தவசிக்கு இன்னும் பல நடிகர்கள் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், அதுமட்டுமன்றி அவர் குணமாகி வந்ததும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் பல இயக்குனர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது


 

From around the web