ஆன்மீக அரசியலை அடுத்து ‘இசை அரசியல்’: பா ரஞ்சித் புதிய முயற்சி

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பதும் அவர் ஆன்மீக அரசியலை மையமாக வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் அறிமுகம் செய்த ஆன்மீக அரசியல் என்பது தற்போது தமிழகம் முழுவதும் விவாதத்திற்கு உரிய ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்மீக அரசியல் அடுத்து இசை அரசியல் என்ற புதிய முயற்சியை பா ரஞ்சித் அவர்கள் எடுத்துள்ளார்

பா ரஞ்சித்தின் சமூக வலைதளத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் மார்கழியில் மக்கள் இசை என்ற புதிய முயற்சி தொடங்கப்பட உள்ளது. இந்த மக்கள் இசையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

pa ranjith

டிசம்பர் 24 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சென்னையில் பல்வேறு அரங்கங்களில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் பா ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார் 

இசை மூலம் அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று பா ரஞ்சித் கூறியதை அடுத்து அவருடைய இசை அரசியல் முயற்சி எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web