பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கொலைகள்..!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து நடிகை அபிராமி இந்த வாரம் வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷனில் மதுமிதா மற்றும் மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இன்று
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 

அதை தொடர்ந்து நடிகை அபிராமி இந்த வாரம் வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷனில் மதுமிதா மற்றும் மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கொலைகள்..!


பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இன்று வழங்கப்பட்டது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்சையும் கொல்வார்கள் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கினார். 

இதில் கொலையாளிகளாக வனிதாவும் அவருக்கு கூட்டாளியாக முகின் ராவும் தேர்வு செய்யப்பட்டனர். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் படி, சாக்‌ஷி அகர்வால் போட்டிருந்த மேக்-அப்பை அழிக்கச் செய்து அவரை கொலை செய்தனர். அடுத்ததாக மோகன் வைத்தியாவை மைக்கேல் ஜாக்சன் போல ஆடவைத்து அவரையும் கொன்றனர். 

அவர்கள் இருவரும் அங்கு ஆவியாக பொழுதை கழிக்க வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க்கில் கூறியிருந்தார். இந்த டாஸ்க்கின் மீதி இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web