நீங்க இனிமே அட்வைஸ் செய்யாதீங்க: மும்தாஜின் வாயை அடைத்த விஜி

பிக்பாஸ் வீட்டில் கடந்த 60 நாட்களுக்கும் மேல் அன்பின் சொரூபமாக இருந்த மும்தாஜ், தற்போது வேஷம் கலைந்து சண்டைக்காரியாக மாறியுள்ளார். இறுதிநாள் நெருங்க நெருங்க சக போட்டியாளர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதோடு, அவருடைய அன்பு ஆயுதம் வேலை செய்யாததால் படு அப்செட்டில் உள்ளார். குறிப்பாக புதியதாக வந்த விஜயலட்சுமி, மும்தாஜ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது படு சுவாரஸ்யமாக உள்ளது. இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி இடையே மோதல் ஏற்படுகிறது.
 

 நீங்க இனிமே அட்வைஸ் செய்யாதீங்க: மும்தாஜின் வாயை அடைத்த விஜி

பிக்பாஸ் வீட்டில் கடந்த 60 நாட்களுக்கும் மேல் அன்பின் சொரூபமாக இருந்த மும்தாஜ், தற்போது வேஷம் கலைந்து சண்டைக்காரியாக மாறியுள்ளார். இறுதிநாள் நெருங்க நெருங்க சக போட்டியாளர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதோடு, அவருடைய அன்பு ஆயுதம் வேலை செய்யாததால் படு அப்செட்டில் உள்ளார். குறிப்பாக புதியதாக வந்த விஜயலட்சுமி, மும்தாஜ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது படு சுவாரஸ்யமாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி இடையே மோதல் ஏற்படுகிறது. மும்தாஜின் தவறை சுட்டிக்காட்டிய விஜயலட்சுமி இந்த வீட்டில் தனக்கு தவறை சுட்டிக்காட்டும் தகுதி இருப்பதாக கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் மும்தாஜ் விஜயலட்சுமியிடம் காரசாரமாக வாக்குவாதம் செய்ய மற்ற போட்டியாளர்கள் இதனை அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

நீங்க இனிமே அட்வைஸ் செய்யாதீங்க: மும்தாஜின் வாயை அடைத்த விஜிஇறுதியில் நீங்க இனிமே யாருக்கும் அட்வைஸ் செய்யாதீங்க, அதுக்கு முன்னாடி நீங்கள் செய்வதெல்லாம் சரியா? என்பதை பார்த்து கொள்ளுங்கள் என்று விஜயலட்சுமி கூற அதற்கு மும்தாஜ் ‘நிறுத்துங்கள் உங்களுக்கு பேசவே தெரியவில்லை’ என்று கூறி அடக்க பார்க்கின்றார். ஆனால் விஜயலட்சுமி அடங்குகிற ஆள் போல் தெரியவில்லை

From around the web