நாமினேஷன் பட்டியலில் வராத முகின்!!!

பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது. வாரத்தின் முதல்நாளான நேற்று, இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. கடந்தவாரம் நடைபெற்ற டாஸ்க்கில் கவின் இந்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்த வாரம் நாமினேஷனில் வனிதா தர்ஷன் மற்றும் ஷெரின் பெயரைக் குறிப்பிட்டு போன வாரம் நடந்த பிரச்சினைகளைக்
 
நாமினேஷன் பட்டியலில் வராத முகின்!!!

பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது.


வாரத்தின் முதல்நாளான நேற்று, இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

கடந்தவாரம் நடைபெற்ற டாஸ்க்கில் கவின் இந்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.

நாமினேஷன் பட்டியலில் வராத முகின்!!!

அதன்பின்னர் இந்த வாரம் நாமினேஷனில் வனிதா தர்ஷன் மற்றும்  ஷெரின் பெயரைக் குறிப்பிட்டு போன வாரம் நடந்த பிரச்சினைகளைக் குறிப்பிட்டார்.

கவின் வனிதாவையும் ஷெரினையும் குறிப்பிட்டார், அடுத்துவந்த லோஸ்லியா வனிதாவையும் ஷெரினையும் குறிப்பிட்டார், சாண்டி வனிதாவையும் ஷெரினையும் குறிப்பிட்டார். ஸ்கெட்ச் போட்டு தூக்கும் கவின்-லாஸ்லியா-சாண்டி ஆகியோர் வழக்கம்போல் திட்டமிட்டபடி ஒரே மாதிரியாக நாமினேட் செய்தனர்.

ஷெரின் வனிதாவையும், சாண்டியையும், முகென் வனிதாவையும், தர்ஷனையும், தர்ஷன் வனிதாவையும், சாண்டியையும் நாமினேட் செய்தனர்.


இந்த வாரத்தில் கேப்டன் லாஸ்லியா மற்றும் முகினை விடுத்து பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் உள்ளனர். அதாவது கவின், வனிதா, தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

From around the web