பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வான முகின்!

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், இந்த வாரம் நடந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்கியது. அதில் சிலர் சிறந்த போட்டியாளராக விஜயகாந்த் போல வேடமணிந்து நடித்த சரவணன் பெயரை பரிந்துரைத்தனர். இதற்கு சேரன் ஆட்சேபம் தெரிவித்தார். விஜயகாந்த் போல சரவணன் இருக்கிறார். ஆனால் மேடையில் இருக்கும் போது மட்டுமே அவர் விஜயகாந்த் போல நடந்து கொண்டார். ஆனால் வெளியில் அவர் அப்படியில்லை என்று சேரன் காரணம் தெரிவித்தார். இதனால்
 

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், இந்த வாரம் நடந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்கியது. அதில் சிலர் சிறந்த போட்டியாளராக விஜயகாந்த் போல வேடமணிந்து நடித்த சரவணன் பெயரை பரிந்துரைத்தனர். 

 
இதற்கு சேரன் ஆட்சேபம் தெரிவித்தார். விஜயகாந்த் போல சரவணன் இருக்கிறார். ஆனால் மேடையில் இருக்கும் போது மட்டுமே அவர் விஜயகாந்த் போல நடந்து கொண்டார். ஆனால் வெளியில் அவர் அப்படியில்லை என்று சேரன் காரணம் தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வான முகின்!


இதனால் கோபமான சரவணன் சேரனை தகாத வார்த்தைகளால் பேசினார். 
அப்போது வீட்டுத் தலைவர் தர்ஷன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி மற்றும் கவின் ஆகியோர் சரவணனிடம் அதிருப்தி தெரிவித்தனர்.


பிறகு மதுமிதா சரவணனை தனியாக சந்தித்து நடந்த விஷயம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து கண்ணீர் வீட்டு அழுதார். உடன் சாண்டியும், கவினும் இருந்தனர். அப்போது சரவணன், பல ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு சேரன் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தை கூறினார். 

 
இந்நிலையில், லக்ஸுரி பட்ஜெட்டில் சிறப்பாக விளையாடியவர்களாக தேர்வு செய்யப்படட முகின் ராவ், மதுமிதா மற்றும் சாண்டி ஆகியோரில் யார் அடுத்த தலைவர் என்பதற்கான டாஸ்க் வழங்கப்பட்டது.

அதில் முதலாவதாக சாண்டி தோற்றுப் போனார். முகினுடன் கடைசிவரை போராடினார் மது. பிறகு அவரும் போட்டியில் பின் வாங்கினார். இறுதியில் முகின் பிக்பாஸ் வீட்டில் தலைவராக தேர்வானார்.

From around the web