இது நட்பு மட்டுமே எனத் திட்டவட்டமாக மறுத்த முகின்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வனிதா, மீரா மிதுன் சென்ற பிறகு டிஆர்பியானது சற்று சரிந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பங்கேற்ற போட்டியாளர்களில் , ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சரவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சரிந்த டிஆர்பியை தூக்கி நிறுத்தவே சர்ச்சையின் நாயகி கஸ்தூரி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் நுழைந்த இரண்டு நாட்களிலேயே வீட்டிற்குள் உள்ள அனைவரையும் கேள்விக் கணைகளால் துளைத்துள்ளார்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வனிதா, மீரா மிதுன் சென்ற பிறகு டிஆர்பியானது சற்று சரிந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பங்கேற்ற போட்டியாளர்களில் , ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சரவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சரிந்த டிஆர்பியை தூக்கி நிறுத்தவே சர்ச்சையின் நாயகி கஸ்தூரி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் நுழைந்த இரண்டு நாட்களிலேயே வீட்டிற்குள் உள்ள அனைவரையும் கேள்விக் கணைகளால் துளைத்துள்ளார்.

அதில் அதிகம் மாட்டிக் கொண்டு முழிப்பது கவின்தான். வார இறுதியான நேற்று கமல் ஹாசன் போட்டியாளர்களைச் சந்தித்தார்.

இது நட்பு மட்டுமே எனத் திட்டவட்டமாக மறுத்த முகின்

ஒவ்வொருவரை பற்றியும் கேள்வி எழுப்பிய கமல் ஹாசன், கட்டில் உடைந்ததது எப்படி என முகினிடம் கேட்டார். ரேஷ்மா வெளியேறியது என்னால்தான் என்று சோகத்தில் இருந்தேன், அப்போது அதனைப் புரிந்துகொள்ளாமல் அபிராமி பேசியதால் கட்டில் உடையும்படி ஆகிவிட்டது என்றார்.

இது நட்பா? காதலா? என்ற கமல் ஹாசன் கேட்ட கேள்விக்குசிறிதும் தயங்காமல் முகெனை காதலிப்பதாக அபிராமி கூறினார். மற்ற போட்டியாளர்கள் இதனைக் கேட்டு ஷாக் ஆகினர்.

ஆனால் இது நட்பு மட்டுமே எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் அபிராமி கதறி அழத் துவங்கிவிட்டார். 

From around the web