மிஸ்டர் சந்திரமெளலி திரைவிமர்சனம்

‘திராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களை அடுத்து இயக்குனர் திரு இயக்கியுள்ள நாலாவது படம், கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இந்த படம் எப்படி இருக்கின்றது என்பதை பார்ப்போமா சென்னையில் இயங்கி வரும் இரண்டு முன்னணி கால்டாக்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியில் சில பயணிகள் கொல்லப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளில் கார்த்திக்கும் கொல்லப்படுகிறார். தந்தையை கொலை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்கும்
 
mr.chandramouli

மிஸ்டர் சந்திரமெளலி திரைவிமர்சனம்

‘திராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களை அடுத்து இயக்குனர் திரு இயக்கியுள்ள நாலாவது படம், கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இந்த படம் எப்படி இருக்கின்றது என்பதை பார்ப்போமா

சென்னையில் இயங்கி வரும் இரண்டு முன்னணி கால்டாக்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியில் சில பயணிகள் கொல்லப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளில் கார்த்திக்கும் கொல்லப்படுகிறார். தந்தையை கொலை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்கும் மகனின் கதை தான் இந்த ‘மிஸ்டர் சந்திரமெளலி. இதுபோன்ற கதையை தமிழ் சினிமா நூற்றுக்கணக்கான படங்களை பார்த்துள்ளது என்பதே இதன் முதல் குறை

மிஸ்டர் சந்திரமெளலி திரைவிமர்சனம்கவுதம் கார்த்திக் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக உள்வாங்கி மிகைப்படுத்தாத நடிப்பை தந்துள்ளார். அடல்ட் படத்திற்கு பின்னர் அவருக்கு கிடைத்த ஒரு உருப்படியான படம்

ரெஜினாவை கவர்ச்சிக்கும் கதைக்கும் சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். ரெஜினாவின் மார்க்கெட்டை இந்த படம் நிச்சயம் உயர்த்தும்

நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்புக்கு இந்த படம் தீனி போடவில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி போல ஒரு நல்ல நடிகர் வேஸ்ட் செய்யப்பட்டுள்ளார்.

வரலட்சுமியின் கேரக்டரில் இயக்குனரே உச்சகட்ட குழப்பத்தில் உள்ளதால் இவர் நன்றாக நடித்திருந்தும் மனதில் பதிய மறுக்கின்றார்.

இதேபோன்று ஒரு நாலு படம் நடித்தால் சதீஷ் ஃபீல்ட் அவுட் என்பதில் சந்தேகமே இல்லை

மிஸ்டர் சந்திரமெளலி திரைவிமர்சனம்இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளதால் மனதில் நிற்கின்றனர்.

சாம் சிஎஸ் பாடல்களில் கவுதம்-ரெஜினா ரொமான்ஸ் பாடல் சூப்பர். பின்னணி இசையும் கதைக்கேற்ப உள்ளது.

எந்த ஒரு கார்ப்பரேட் முதலாளியாவது தனது போட்டி நிறுவனத்தை அழிக்க தனது நிறுவனத்தின் பெயரை கெடுத்து கொள்ள முடிவெடுப்பாரா? இந்த படத்தின் கான்செப்ட்டிலேயே பெரிய ஓட்டை உள்ளதால் படத்தை ரசிக்க முடியவில்லை. ஒருசில திருப்பங்கள், ஒரே ஒரு சஸ்பென்ஸ் தவிர இந்த படத்தில் எதையுமே புதுமையாக செய்யவில்லை இயக்குனர் திரு

மொத்ததில் ரெஜினாவின் கவர்ச்சி, கவுதம் கார்த்திக்கின் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.

2.25/5

From around the web