பாடகராக மாறிய மொட்டை ராஜேந்திரன்

‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் அஜித், விஜய் படங்கள் உள்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும், இந்த பாடலை அவர் எந்த வித சிரமமும் பிசிரும் இன்றி பாடியதாகவும், ஸ்ரீநாத் கூறியுள்ளார். இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் முடிந்ததாகவும், இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரவிருப்பதாகவும்
 

பாடகராக மாறிய மொட்டை ராஜேந்திரன்

‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் அஜித், விஜய் படங்கள் உள்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் தற்போது பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும், இந்த பாடலை அவர் எந்த வித சிரமமும் பிசிரும் இன்றி பாடியதாகவும், ஸ்ரீநாத் கூறியுள்ளார். இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் முடிந்ததாகவும், இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக நடிகர்கள் அதிகளவில் பாடி வரும் நிலையில் தற்போது மொட்டை ராஜேந்திரனும் பாடகாராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web