’மூக்குத்தி அம்மன்’ வீடியோ பாடல்: தேதியை அறிவித்த ஆர்ஜே பாலாஜி!

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டிரைலரை அடுத்து ’ஆடிக்குத்து’ என்ற வீடியோ பாடல் நாளை வெளியாக இருப்பதாக ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்றும் குறிப்பாக பெண்களின் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது


 

From around the web