மூக்குத்தி அம்மன் புரமோஷன்: ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி!

 

ஆர்ஜே பாலாஜி தான் இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ரஜினி குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரஜினி அரசியல் குறித்து தான் அளித்த பேட்டி ஒன்று தவறானது என்றும் அந்த பேட்டி குறித்து பின்னாளில் தான் மிகவும் வருந்தி இருப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் ரஜினி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார் 

rj balaji

தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர் என்றும் ரஜினியின் மனிதநேயம் குறித்து தன்னுடைய தாத்தா தன்னிடம் கூறியிருக்கிறார் என்றும், அந்த விஷயம்தான் ஆழ்மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது என்றும் ரஜினி எல்லா நலன்களையும் பெற்று வாழ கடவுளை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் 

மூக்குத்தி அம்மன் புரமோஷனுக்காக ரஜினியின் அரசியல் குறித்து தவறாக பேசிய ஆர்ஜே பாலாஜி தற்போது மன்னிப்பு கேட்டு உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web