ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி!

பொதுவாக மலையாள திரைப்படங்கள் 10 முதல் 15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுவிடும். ஆனால் மோகன்லால், கீர்த்திசுரேஷ் நடித்த ஒரு படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ’மன்மதுடு 2’ என்ற ஒரே தெலுங்கு திரைப்படம் மட்டுமே வெளியான நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில் குறைந்தது 6 திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ’தலைவர் 16 என்பது குறிப்பிடத்தக்கது
 
ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி!

பொதுவாக மலையாள திரைப்படங்கள் 10 முதல் 15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுவிடும். ஆனால் மோகன்லால், கீர்த்திசுரேஷ் நடித்த ஒரு படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ’மன்மதுடு 2’ என்ற ஒரே தெலுங்கு திரைப்படம் மட்டுமே வெளியான நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில் குறைந்தது 6 திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ’தலைவர் 16 என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த மலையாள திரைப்படம் ஒன்று தமிழ் உள்பட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. பிரியதர்ஷன் இயக்கிய இந்த படம் வரும் மார்ச் 26ஆம் தேதி உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இந்த படத்தில் மோகன்லால், கீர்த்திசுரேஷ், மஞ்சுவாரியர், சுனில்ஷெட்டி, அர்ஜூன், பிரபு, நெடுமுடிவேணு, சுஹாசினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web