அட நம்ம வீட்டு தங்கச்சியின் புதுப்படம்...!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம்...!
 
நடிகர் விஷ்ணு விஷாலின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து....,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருந்த "நம்ம வீட்டுப்பிள்ளை" திரைப்படம். இத்திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்"நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரின் வீட்டின் தங்கச்சியாகவே பார்க்கப்பட்டார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த "காக்கா முட்டை" திரைப்படம்  ஹிட்டடித்தது. இத்திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Aishwarya rajesh

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் விக்ரமுடன் "சாமி 2" திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியுடன் "ரம்மி", "தர்மதுரை", "க/பெ.ரணசிங்கம்", "பண்ணையாரும் பத்மினியும்" போன்ற படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் "அசுரன்" இயக்குனர் இயக்கிய "வடசென்னை" என்ற வெற்றி படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது.  தற்போது இவர் "வெண்ணிலா கபடி குழு" படத்தின் கதாநாயகனும், நடிகருமான விஷ்ணு விஷால் உடன் ஒரு புதிய திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார் அத்திரைப்படத்திற்கு "மோகன்தாஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.இதனைக் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டரை போஸ்ட் செய்துள்ளார்.


 "வேலையின் ரசிகனாக இருந்தேன் ... நீங்கள் எப்போதுமே ஒரு நல்ல நண்பராக இருந்தீர்கள் .. இப்போது, ​​# மோஹந்தாஸுக்காக ஒன்றாக வேலை செய்வோம்." இவ்வாறாக நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web