மோடி பற்றிய இணையத்தொடருக்கும் தடை

பி.எம் நரேந்திர மோடி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாக இருந்தது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் மோடியாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் வெளிவரக்கூடாது என பலரும் பலவித முட்டுக்கட்டை போட்ட நிலையில் படம் வெளிவருவது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. இப்படம் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பின்னர்தான் வெளிவரும் என்ற நிலை உள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இணையதள தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இதற்கு தேர்தல்
 

பி.எம் நரேந்திர மோடி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாக இருந்தது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் மோடியாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் வெளிவரக்கூடாது என பலரும் பலவித முட்டுக்கட்டை போட்ட நிலையில் படம் வெளிவருவது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

மோடி பற்றிய இணையத்தொடருக்கும் தடை

இப்படம் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பின்னர்தான் வெளிவரும் என்ற நிலை உள்ளது. இதனிடையே

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இணையதள தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மோடி- ஜார்னி ஆப் எ காம்மன் மேன் என்ற வரலாற்றுத் தொடரை ஈராஸ் நவ் என்ற நிறுவனம் தயாரித்து தனது தளத்திலேயே ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அந்தத் தொடரை ஒளிபரப்பக் கூடாது என ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

From around the web