நான்காவது முறையாக தனுஷுடன் இணையும் இயக்குனர்!

தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் தனுஷின் 44வது திரைப்படம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளிவந்தது இந்த நிலையில் இந்த படத்தை ’யாரடி நீ மோகினி’ ’உத்தமபுத்திரன்’ ’குட்டி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தை தனுஷே இயக்கவிருந்ததாகவும், ஆனால் அவர் பிசியாக
 
நான்காவது முறையாக தனுஷுடன் இணையும் இயக்குனர்!

தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் தனுஷின் 44வது திரைப்படம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படத்தை ’யாரடி நீ மோகினி’ ’உத்தமபுத்திரன்’ ’குட்டி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை தனுஷே இயக்கவிருந்ததாகவும், ஆனால் அவர் பிசியாக இருப்பதால் தனுஷின் கதை வசனத்தில் உருவான இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம் என்ற’ திரைப்படமும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ஆகிய ’கர்ணன்’ என்ற திரைப்படமும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் சில மாதங்கள் லாக்டவுன் நீடித்தால் இந்த இரண்டு படங்களும் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web