தவறைத் தவிர்த்திருக்கலாம்: வரி பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் டுவீட்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்துவது குறித்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அதுமட்டுமின்றி நீதிபதியால் ரஜினிகாந்த் தரப்பினர் கண்டிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் இதுகுறித்து ’அனுபவமே பாடம்’ என்ற ஹேஷ்டேக்கில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்: அதில் அவர் கூறியிருப்பதாவது 

ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web