ஜீவாவுக்கு ஜோடியாகும் மிஸ் இமாச்சலபிரதேச அழகி

நடிகர் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படங்கள் வராத நிலையில் சமீபத்தில் வெளியான ‘கலகலப்பு 2’ ஓரளவு வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ‘கொரில்லா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ‘குக்கூ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இயக்கவுள்ள அடுத்த படமான ‘ஜிப்ஸி’ என்ற திரைப்படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடாஷாசிங் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இமாச்சல
 

ஜீவாவுக்கு ஜோடியாகும் மிஸ் இமாச்சலபிரதேச அழகி

நடிகர் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படங்கள் வராத நிலையில் சமீபத்தில் வெளியான ‘கலகலப்பு 2’ ஓரளவு வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ‘கொரில்லா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் ‘குக்கூ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இயக்கவுள்ள அடுத்த படமான ‘ஜிப்ஸி’ என்ற திரைப்படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடாஷாசிங் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த அழகி போட்டியில் வென்று ‘மிஸ் இமாச்சல பிரதேஷ்’ என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவுக்கு ஜோடியாகும் மிஸ் இமாச்சலபிரதேச அழகிமாடலிங் செய்து வரும் நடாஷாவின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது குறித்து நடாஷா கூறியபோது, ‘இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. அவர் நேர்த்தியாக கூறிய கதையை கேட்டவுடன் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

From around the web