SIIMA விருதுகள்: மெர்சலுக்கு 11 விருதுகள் கிடைக்குமா?

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 14,15 தேதிகளில் நடைபெறவுள்ள SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் என கருதப்படுகிறது. ‘மெர்சல்’ திரைப்படம் மொத்தம் 11 பிரிவுகளுக்கு விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 11 விருதுகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய விருது தவிர பல விருதுகளை வென்றுள்ள ‘மெர்சல்’ திரைப்படம் SIIMA வின் 11 விருதுகளை வெல்வது விஜய்
 

SIIMA விருதுகள்: மெர்சலுக்கு 11 விருதுகள் கிடைக்குமா?

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 14,15 தேதிகளில் நடைபெறவுள்ள SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் என கருதப்படுகிறது.

‘மெர்சல்’ திரைப்படம் மொத்தம் 11 பிரிவுகளுக்கு விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 11 விருதுகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய விருது தவிர பல விருதுகளை வென்றுள்ள ‘மெர்சல்’ திரைப்படம் SIIMA வின் 11 விருதுகளை வெல்வது விஜய் ரசிகர்கள் ஆன்லைனில் போடும் வாக்குகளை பொறுத்தே உள்ளது. வாக்குகளை பதிவு செய்ய விரும்புபவர்கள் http://siima.in/nomination.php என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்கலாம்

SIIMA விருதுகள்: மெர்சலுக்கு 11 விருதுகள் கிடைக்குமா?மெர்சல் படத்தை அடுத்து விஜய்சேதுபதியின் ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நயன்தாராவின் அறம், அதிதிபாலனின் ‘அருவி’, கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் அதிக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மெர்சல் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள்

சிறந்த நடிகர், (விஜய்)
சிறந்த இயக்குனர், (அட்லி)
சிறந்த படம்,
சிறந்த நடிகை, (நித்யாமேனன்)
சிறந்த வில்லன், (எஸ்.ஜே.சூர்யா)
சிறந்த இசையமைப்பாளர், (ஏ.ஆர்.ரஹ்மான்)
சிறந்த பாடலாசிரியர், (விவேக்)
சிறந்த பாடகி, (ஸ்ரேயா கோஷல்)
சிறந்த பாடகர், (ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சித்ஸ்ரீராம்)
சிறந்த நகைச்சுவை நடிகர், (யோகிபாபு)
சிறந்த ஒளிப்பதிவாளர் (விஷ்ணு)

From around the web