மெர்சல் எங்களுக்கு பெருமைக்குரிய படம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பாஜகவினர் உதவியால் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படம் 130 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் மிகப்பெரிய வசூலை பெற்றதால் இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களும் தயாரிப்பாளரும் நல்ல லாபம் அடைந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஒருசிலர் மெர்சல் படம் தோல்வி என்றும், அதன் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.20 கோடி வரை நஷ்டம் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
 

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பாஜகவினர் உதவியால் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படம் 130 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் மிகப்பெரிய வசூலை பெற்றதால் இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களும் தயாரிப்பாளரும் நல்ல லாபம் அடைந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒருசிலர் மெர்சல் படம் தோல்வி என்றும், அதன் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.20 கோடி வரை நஷ்டம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியதாவது: எங்களுக்கு ‘மெர்சல்’ படம் மெகா ஹிட் என்று கூறினர். தற்போது ‘மெர்சல்’ படம் எங்களுக்கு பெருமை என்றும், தளபதி விஜய்யுடன் பணியாற்றியது எங்களுக்கு பெரிய மரியாதை என்று கூறியுள்ளது.

https://twitter.com/ThenandalFilms/status/978596567836868609

From around the web