மெர்சல் படத்திற்கு பிரிட்டன் விருது

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது ‘பிரிட்டன் நாட்டின் விருது கிடைத்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று 46வது தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கு விருது அளிக்கப்பட்டது. இதன்படி சிறந்த வெளிநாட்டு படமான விஜய்யின் மெர்சல் பலத்த போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டது. இந்த விருது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம்
 

மெர்சல் படத்திற்கு பிரிட்டன் விருது

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது ‘பிரிட்டன் நாட்டின் விருது கிடைத்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று 46வது தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கு விருது அளிக்கப்பட்டது. இதன்படி சிறந்த வெளிநாட்டு படமான விஜய்யின் மெர்சல் பலத்த போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டது.

இந்த விருது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்திற்கு கிடைத்த விருது காரணமாக படக்குழுவினர்களும், விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web