ஒரு காலத்தில் தமிழ்நாட்டை கலக்கிய பாடல்- ஓ போடு அதிசயம்

கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெமினி. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படம் அதிரி புதிரி ஹிட் ஆகிவிட்டது. இணையம் லேசாக வளர்ச்சி பெற்ற நேரம்தான் இருந்தாலும் இந்த அளவு இப்போது இருக்கும் அளவு கடும் வளர்ச்சி இல்லை. அப்படி கடும் வளர்ச்சி பெறாமல் டீசரோ, டிரெய்லரோ இல்லாமல் இப்படத்துக்கு மிகப்பெரிய இலவச விளம்பரத்தை தேடி கொடுத்தது ஒரு பாடல். ஆடியோ வெளியிட்ட அடுத்த நாளில் இருந்து ஃபயர் போல பற்றிக்கொண்ட ஒரு பாடல்தான் ஓ
 

கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெமினி. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படம் அதிரி புதிரி ஹிட் ஆகிவிட்டது. இணையம் லேசாக வளர்ச்சி பெற்ற நேரம்தான் இருந்தாலும் இந்த அளவு இப்போது இருக்கும் அளவு கடும் வளர்ச்சி இல்லை. அப்படி கடும் வளர்ச்சி பெறாமல் டீசரோ, டிரெய்லரோ இல்லாமல் இப்படத்துக்கு மிகப்பெரிய இலவச விளம்பரத்தை தேடி கொடுத்தது ஒரு பாடல்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை கலக்கிய பாடல்- ஓ போடு அதிசயம்

ஆடியோ வெளியிட்ட அடுத்த நாளில் இருந்து ஃபயர் போல பற்றிக்கொண்ட ஒரு பாடல்தான் ஓ போடு என்ற பாடல். தமிழ்நாட்டின் டீக்கடைகள், பேருந்துகள், சலூன்கள், வீடுகள், ஹோட்டல்கள் என எங்கு எப்போது பார்த்தாலும் இப்பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

குறிப்பாக சுற்றுலா செல்பவர்கள் அந்தக்காலத்து சுராங்கனி என்ற ஹிட் பாடலை பாடிக்கொண்டு செல்வது 70,80களில் வழக்கம். அது போல சுற்றுலா செல்லும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓ போடு என்ற வார்த்தையே தாரக மந்திரமாக இருந்தது.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சரண் இயக்கி இருந்தார். அப்போதிருந்த விக்ரமின் கடுமையான மார்க்கெட் வேல்யூவும் படத்தில் நடித்த கலாபவன் மணி என்ற வில்லனின் வில்லத்தனமும் படத்தின் சுனாமி போல வந்த ஓ போடு பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

படத்தை எல்லா இடங்களிலும் கொண்டு போய் சேர்த்தது இப்படத்தின் ஓ போடு பாடலேயாகும். பரத்வாஜ் இந்த படத்தின் இசையை அமைத்திருந்தார். இப்பபடத்தின் கதை மிக சுமாரான கதையாகும் பாடலின் வெற்றியே ஜெமினியை பெருமளவு வெளியில் தெரிய செய்தது.

இப்பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தார். விக்ரமும் இப்பாடலை தனியாக பாடி இருந்தார்.

From around the web