பிக்பாஸில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் மீரா..!!

கமல்ஹாசன் தொகுத்தி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது வாரங்களை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் ஃபாத்திமா பாபுவும், இரண்டாவது வாரத்தில் வனிதாவும், மூன்றாவது வாரத்தில் மோகன் வைத்யாவும் வெளியேற, 4 வது வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. வாரயிறுதி நாட்களில் நடைபெறும் எலிமினேஷனுக்கான சுற்றில் கடந்த வாரம் அதிக பிரச்சினைகளை உண்டாக்கிய மீரா மிதூன் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக, வீட்டுக்குள் இருந்த மீரா மிதூன் மிகவும்
 

கமல்ஹாசன் தொகுத்தி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது வாரங்களை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் ஃபாத்திமா பாபுவும், இரண்டாவது வாரத்தில் வனிதாவும், மூன்றாவது வாரத்தில் மோகன் வைத்யாவும் வெளியேற, 4 வது வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

வாரயிறுதி நாட்களில் நடைபெறும் எலிமினேஷனுக்கான சுற்றில் கடந்த வாரம் அதிக பிரச்சினைகளை உண்டாக்கிய மீரா மிதூன் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

பிக்பாஸில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் மீரா..!!

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக, வீட்டுக்குள் இருந்த மீரா மிதூன் மிகவும் பதட்டமாக இருந்தார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரன் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு புயலை கிளப்பியது. நேற்று கமல்ஹாசனும் இந்த விவகாரம் குறித்து மீராவிடம் விளக்கமாக பேசினார். 

இதுதொடர்பாக கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்களுக்கு நடந்த உரையாடலில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்த போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. முடிவாக மீராவின் பெயரை அறிவித்தார் கமல்.

From around the web