’த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்த மீனா: வைரலாகும் புகைப்படம்

 

மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்புகளும் தொடங்கின. விரைவில் மோகன்லால் மற்றும் மீனா இந்த படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்பட்டது 

இதனை அடுத்து தற்போது நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார். அதில் மோகன்லால் மற்றும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இவ்வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தையும் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web