இளையராஜா ரசிகர்களை ஏமாற்றும் மாயோன்

இசைஞானி இளையராஜா இசையமைத்த பழைய திரைப்படங்களான, நூறாவது நாள், விடியும் வரை காத்திரு, 24 மணி நேரம், உருவம் என பல படங்கள் அமானுஷ்ய மற்றும் திக் திக் ரக படங்கள் ஆகும் இது போல இளையராஜாவின் பின்னணி இசையை வெறித்தனமாக கேட்ட 80கள் சினிமாவினர் இன்னும் அதை ரசித்து கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இளையராஜா நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அமானுஷ்ய படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் ரசிகர்கள் விடுவார்களா? கடந்த வருடம் சிபிராஜ் நடிப்பில் மாயோன்
 

இசைஞானி இளையராஜா இசையமைத்த பழைய திரைப்படங்களான, நூறாவது நாள், விடியும் வரை காத்திரு, 24 மணி நேரம், உருவம் என பல படங்கள் அமானுஷ்ய மற்றும் திக் திக் ரக படங்கள் ஆகும் இது போல இளையராஜாவின் பின்னணி இசையை வெறித்தனமாக கேட்ட 80கள் சினிமாவினர் இன்னும் அதை ரசித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இளையராஜா ரசிகர்களை ஏமாற்றும் மாயோன்

அப்படிப்பட்ட இளையராஜா நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அமானுஷ்ய படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் ரசிகர்கள் விடுவார்களா? கடந்த வருடம் சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்ற படம் ஆரம்பிப்பதாக ஓப்பனிங் டீசர் மட்டும் வந்தது 5000 வருட பழமையான ஒரு விசயத்தை பற்றிய மர்மத்தை உள்ளடக்கிய இப்படத்தின் மோஷன் போஸ்டர் டீசரே பயங்கரமாக இருந்தது. இசைஞானியின் இசையும் பின்னே வரும் ஒரு பெருமாள் சிலையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டின.

இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக இப்படத்தை பற்றி அப்டேட் தகவல்கள் எதுவும் வராதது இளையராஜா ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. ஏனென்றால் படத்தில் பின்னணி இசையில் இளையராஜா அந்தக்கால படங்கள் போல கலக்கி இருப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இப்போது இப்படம் பற்றிய எந்த தகவலும் இல்லாதது இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது. சில பத்திரிக்கைகளில் டிசம்பர் 2020ல் படம் வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது இதுவும் உண்மையா என தெரியவில்லை.

From around the web