அவர்கள் ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும்; ரஜினியை மறைமுகமாக சாடுகிறாரா கமல்ஹாசன்?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும்  ரஜினியை கமல்ஹாசன் அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே

ஏற்கனவே பலமுறை ரஜினியை அவர் விமர்சனம் செய்திருந்தாலும் கூட, கமல்ஹாசன் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்துக்களையும் இதுவரை ரஜினிகாந்த் தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது இந்த கொரோனா காலத்தில் அரசியல் கட்சி தொடங்க தயங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் வெளியே வந்து கட்சி வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து அவர் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கும் வகையில் கூறியுள்ளதாவது:

"பிக்பாஸில் கோடிக்கணக்கில் வாங்குகிறேன்; இல்லை என்று சொல்லவில்லை; வேறு ஒன்றை சொன்னால் சக நடிகர்களை கிண்டலடிப்பதாக இருக்கும்; அவர்கள் சவுகரியமாக, ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும்; என் வாழ்வாதாரம், என்னை வாழவைத்தவர்களிடமே கொட்டுவேன்!" என  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

From around the web