பிரமாண்ட படத்தில் அறிமுகமாகும் மௌனராகம் சீரியல் கிருத்திகா!

3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் மௌனராகத்தில் நடித்து புகழ் பெற்றவர் கிருத்திகா.
 

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. மேலும் இந்த சீரியலின் அடுத்த பாகம் சீக்கிரமே வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா தான் அதில் சக்தியாக நடிக்கப் போகிறார் என்றும் தெரியவந்தது. மௌன ராகம் சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகா தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். 

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான கிருத்திகாவை வைத்து ஒரு மெகா சீரியலை விஜய் டிவி உருவாக்கியுள்ளது. பழங்காலத்தில் நடப்பது போன்ற பிரமாண்ட கதையில் ஒரு பெண் நாட்டை ஆண்ட கதையாக இது உருவாக்கியுள்ளது. 

அதுவும் பெண் குழந்தைகளை வெறுக்கும் ராஜாவின் மனதை இளவரசி எப்படி கவர போகிறாள் என்பது தான் கதையின் கரு போல. மௌன ராகம் சீரியலிலும் கிட்டத்தட்ட இதே ஒன் லைன் என்பதால் கிருத்திகா வெளுத்து வாங்குவார் எனபதால் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும் இந்த சீரியலுக்கு மௌன ராகம் வேலன் என்பதை தழுவி 'வேலம்மாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'அம்மா பாடல்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் நடிகை நீலிமா ராணிக்கு மகளாக மௌனராகம் கிருத்திகா நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

From around the web