மாஸ்டர் 6மணிக்கு வராருனா, ஸ்டூடண்ட் 5 மணிக்கு இருப்போம்: ஐஸ்வர்யா தத்தா

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் 6.30 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் மாஸ்டர் 6 மணிக்கு வர இருக்கும் நிலையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ஸ்டூடன்ட் 5 மணிக்கு இருப்போம் என்று ஐஸ்வர்யா தத்தா நடித்த படத்தின் விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது

pubg

ஐஸ்வர்யா தத்தா நடித்த படம் பப்ஜி என்ற ’பொல்லத உலகில் பயங்கர கேம்’. இந்த படத்தின் ’கள்ளக்காதலா’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 

லிரிக் வீடியோ பாடலாக வெளிவரும் இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்துள்ளார் 

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அந்த வகையில் ’கள்ளக்காதலா’ என்ற பாடலை என்று படக்குழுவினர் தீபாவளி விருந்தாக வெளியீடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய்ஸ்ரீ இயக்கி உள்ளார் 

From around the web