’மாஸ்டர்’ டீசர்: தியேட்டரில் ரசிகர்களை குஷிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்

 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களில் வெளியானது என்பது தெரிந்ததே 

மேலும் இந்த படத்தின் டீசர் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நேற்று மாலை 6.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதனை அடுத்து திரையரங்குகளில் குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் நேற்று லோகேஷ் கனகராஜ் உள்பட படக்குழுவினர் வருகைதந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

lokesh

மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் திரையிடப்பட்டு முடித்தபின் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட லோகேஷ் கனகராஜின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷின் இந்த செல்பி திரைப்படம் நெய்வேலியில் விஜய் எடுத்த செல்பி போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளிவரும் என்றும், இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதை அந்த டிரைலர் உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web