மாஸ்டர் பட வெற்றியை ரகசியமாக கொண்டாடிய படக்குழு!

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஜெகதீஷ் உள்ளிட்டோர் மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெளியூர் சென்றுள்ளனர்
 

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மாஸ்டர் படம் இதுவரை 220 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது, இப்படம் OTT தளத்தில் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஜெகதீஷ் உள்ளிட்டோர் மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெளியூர் சென்றுள்ளனர்.

From around the web