மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? ஆண்ட்ரியா தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியுடன் முடிவடைய இருப்பதாக இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 2020 ஆம் ஆண்டில் ஒரு திறமைமிக்க இயக்குனரின் இயக்கத்தில் தான் நடித்து வருவதாகவும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி அம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் ஆண்ட்ரியா தனது
 
மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? ஆண்ட்ரியா தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியுடன் முடிவடைய இருப்பதாக இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

2020 ஆம் ஆண்டில் ஒரு திறமைமிக்க இயக்குனரின் இயக்கத்தில் தான் நடித்து வருவதாகவும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி அம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இதனை அடுத்து பிப்ரவரி இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்பது உறுதியாகிறது. மார்ச் மாதம் முதல் வாரம் முதல் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

From around the web