ஈஸ்வரனை துறத்தியடிக்க தயாராகும் மாஸ்டர்... 

மாஸ்டர் திரைப்படத்திற்கு அனைத்து தியேட்டர்களும் கொடுக்கப்படுவதால் ஈஸ்வரன் சிம்புவிற்கு இடம் கிடைப்பதில் கஸ்டமாகியுள்ளது.
 

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜனவரி 13 மற்றும் 14 அன்று திரைக்கு வரவுள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் தங்களின் கஷ்டத்தை தெரிவித்து வருகின்றனர், மேலும் இது குறித்து நல்ல செய்தி வரும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல திரையரங்க உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்ரமணியம், 100% பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம்" என கூறியுள்ளார்.

From around the web