’மாஸ்டர்’ பொங்கல் ரிலீஸ் உறுதி: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு தள்ளி போகுமா? அல்லது ஓடிடி ரிலீஸா? என்பது குறித்து கலவையான தகவல்கள் கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் பொங்கல் ரிலீசாக ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆவது உறுதி என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 

master

’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பு தன்னிடம் பொங்கல் தினத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்வது உறுதி என்று தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ போன்ற பெரிய திரைப்படம் ரிலீஸ் ஆவது உண்மையிலேயே நல்ல விஷயம் என்றும் அதற்காக விஜய்க்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்வதாகவும் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

From around the web