திரையரங்குகளில் ’மாஸ்டர்’ பொங்கல்: வைரலாகும் பரபரப்பு போஸ்டர் 

 

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஜனவரி 13-ஆம் தேதி இந்தப் படம் தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகப் போவதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவலை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழில் சிறு சிக்கல் இருப்பதாகவும் அதனால் தான் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சமூக வலை தளங்களில் பொங்கல் திருநாளில் மாஸ்டர் வெளியாகும் என்ற வாசகங்களுடன் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது

மாஸ்டர், விஜய், பொங்கல், ஈஸ்வரன்,

இந்த போஸ்டர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்களா? அல்லது ஃபேன்மேட் போஸ்டரா என்று தெரியவில்லை இருப்பினும் இந்த போஸ்டரை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பதும் டுவிட்டரில் இந்த போஸ்டர் டிரெண்டுக்கு வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியானாலும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகும் என்றும் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு சுமார் 300 திரையரங்குகளுக்கு மேல் வழங்க தயாராக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

எது எப்படியாக இருப்பினும் இந்த பொங்கல் நிச்சயம் மாஸ்டர் பொங்கல் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவே கருதப்படுகிறது

From around the web