மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களோடு பார்த்த படக்குழுவினர்!
மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களோடு பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், மாளவிகா மோகனன், அர்ஜுன் என பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர்
Wed, 13 Jan 2021

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது. கொரோனா பயத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வந்து படம் பார்த்துள்ளனர்.
ரிலீஸ் ஆன எல்லா இடங்களிலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு. விமர்சனங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கின்றன.
ரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், மாளவிகா மோகனன், அர்ஜுன் என பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர்.