’மாஸ்டர்’ படம் மாஸா? பிளாப்பா? சமூக வலைத்தல பயனாளிகளின் விமர்சனம்!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தின் விமர்சனங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன 

மாநகரம் மற்றும் கைதி போன்று திரைக்கதை மேஜிக்கை இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இதில் லோகேஷ் கனகராஜ் பாணி சுத்தமாக இல்லை என்றும் முழுக்க முழுக்க இது ஒரு விஜய் படம் என்றும் சமூக வலைதள பயனாளர்கள் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் 

அதேபோல் விஜய்யின் அறிமுக காட்சி மற்றும் இன்டர்வெல் காட்சி மிக அருமை என்றும் விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி என்றும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

master

ஆனால் அதே நேரத்தில் படத்தின் நீளம் ஒரு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்றும் ஆண்ட்ரியா சாந்தனு போன்ற கேரக்டர்கள் மனதில் நிற்கவில்லை என்றும் குறையாக கூறியுள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் வேற லெவல் என்றும் ஒளிப்பதிவு மிக அருமை என்றும் கூறியுள்ள சமூக வலைதள பயனாளிகள் முதல் பாதி மிகவும் ஸ்லோவாக செல்வதாகவும் குறிப்பாக கல்லூரி காட்சிகள் ஒருகட்டத்தில் போரடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் 

விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் விஜய் சேதுபதியின் மாஸ் வசனங்கள் படத்திற்கு விருந்தாக இருப்பதாகவும் இதனை விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்

மொத்தத்தில் இந்த திரைப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மாஸ் ஆகவும், நடுநிலை ரசிகர்களுக்கு     பிளாப்பாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web