மாஸ்டருக்கு வந்த புது சிக்கல்... என்னது இந்த கதையும் அப்படிபட்டதா?

விஜய் படத்திற்கு வரும் வழக்கமான சிக்கலை போன்று இந்த கதையும் திருடப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
 

மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என்று விளக்குவதற்கு கே ரங்கதாஸ் என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் இன்னும் 5 நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. கார்த்தியின் கைதி படத்தைப் போன்று இந்தப் படத்தையும் போதைப்பொருட்களை மையப்படுத்தியே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார். இதில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும், மாஸ்டர் படத்தில், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, பிரிகிதா, தாரா, கௌரி கிஷா, சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், அருண் அலெக்சாண்டர், ரம்யா சுப்பிரமணியன், ரமேஷ் திலக், சாய் தீனா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From around the web