’மாஸ்டர்’ மாளவிகா மோகனின் அடுத்த பட அறிவிப்பு: ஹீரோ யார் தெரியுமா?

 

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக பெற்ற நடிகை மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு உள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்றும் செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தில் நாயகி மாளவிகா மோகனன் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கார்த்திக் நரேன் என்ற இளம் இயக்குனர் இயக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது

தனுஷ், மாளவிகா மோகனன் முதல் முதலாக இந்த படத்தில் நடிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் ’பேட்ட’ திரைப்படத்தில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறி தற்போது தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கும் அளவிற்கு அதிர்ஷ்டக்கார நடிகையாகியுள்ளார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web