லடாக் பள்ளத்தாக்கில் ‘மாஸ்டர்’ மாளவிகா: இன்ஸ்டாவில் புகைப்படங்கள்

 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் அதுமட்டுமின்றி பாலிவுட்டில் அதிரடி ஆக்சன் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான மற்றும் அழகழகான புகைப்படங்களை பதிவு செய்து வரும் மாளவிகா மோகனன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் உள்ள நூப்ரா பள்ளத்தாக்கில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் 

malavika

தன்னந்தனியாக கல் மண் முரடாக இருக்கும் பகுதியிலும் ஆற்றின் தண்ணீர் இருக்கும் பகுதியிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

தனக்கு சுற்றுலா செல்ல மிகவும் விருப்பம் என்றும் அதுவும் தனியாக லடாக் போன்ற பகுதியில் சுற்றுவது பேரின்பம் என்றும் இதுபோன்று மீண்டும் எப்போது சுற்றுலா செல்ல போகிறேன் என ஏங்கி வருவதாகவும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மாஸ்டர் மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

From around the web