‘மாஸ்டர்’ இண்டர்வெல்: விஜய்க்கு பதில் பஞ்ச் பேசும் விஜய்சேதுபதி!

 

தளபதி விஜய் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் இன்டர்வெல் பிளாக்கில் தளபதி விஜய்யின் அதிரடியான பஞ்ச் வசனம் ஒன்று இருக்கும் என்பது தெரிந்ததே

துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற ’ஐ அம் வெயிட்டிங் போன்ற வசனம் அனைத்து படத்திலும் ஃபாலோ செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே போல் மாஸ்டர் திரைப்படத்திலும் இன்டர்வெல் பிளாக்கில் பஞ்ச் வசனம் இருப்பதாகவும் ஆனால் அந்த வசனத்தை விஜய்க்கு பதிலாக விஜய் சேதுபதி பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

vijay sethupathi

துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற அதே ’ஐ அம் வெயிட்டிங்’ என்ற வசனம் தான் மாஸ்டர் திரைப்படத்தின் இடைவேளையின் போதும் இருப்பதாகவும் ஆனால் விஜய் பேசினால் அது ரிப்பீட் ஆக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கருதியதால் அந்த வசனத்தை விஜய் சேதுபதியை பேச வைத்து விட்டதாகவும் அந்த காட்சியில் மாஸ் ஆக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 

மொத்தத்தில் இந்த படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதி அதிக ஸ்கோர் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் தரப்பினரும் அதிருப்தியில் இருப்பதாகவும் இந்த படம் வந்த பிறகு விஜய் சேதுபதி மாஸ் நடிகர்களின் பட்டியலில் இணைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது

From around the web