ஜனவரியில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘தளபதி 65’: விஜய்யின் மெகா பிளான்!

 

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு வரும் ஜனவரி மாதம் இரட்டை விருந்து கொடுக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதிலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது 

அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரையரங்குகளில் வரும் கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் பின்னரே ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 75 அல்லது 80 சதவீத இருக்கைகள் விரைவில் அனுமதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பும் வரும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே ஜனவரியில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் மற்றும் தளபதி 65 படப்பிடிப்பு  தொடக்கம் என விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web