வாடிவாசல் படத்தில் ’மாஸ்டர்’ நடிகை: பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் ஹரி இயக்கும் ’அருவா’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் தற்போது ட்ராப் ஆகி விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ தான் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன

குறிப்பாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்து உள்ளார் என்பதும், வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்திலும் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

சூர்யா ஜோடியாக முதல் முறையாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web